திடீரெனப் பட்டது. ஜோதிடத்தில் ஷட் பல வரிசையில், திக் பலத்திற்கு ஆட்சிக்கு நிகரான பலம் அளிக்கப்பட்டிருக்கின்றது. திக்பலம் திசையை(வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு) அடிப்படையாக வைத்து கூறப்பட்டது என்றாலும், அதன் மேலும் ஒரு சூட்மத்தை அறியும் போது பிர்மிப்பாக உள்ளது. அதே போல், ஒரு கிரகம் அதற்கு திக்பலம் என்று குறிப்படப்பட்டுள்ள இடத்தில் தனியாக திக்பலம், மேலும் அந்த இடத்தில் திக்பலம் கிரகத்துடன் இருந்தாலும் திக்பலம். லக்னத்தில் (அதாவது 1இல்) குருவுக்கும், புதனுக்கும் திக்பலம். சதுர் கேந்திரத்தில் (4இல்) சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் திக்பலம் சப்த கேந்திரத்தில் (7இல்) சனிக்கு திக்பலம் தசம கேந்திரத்தில் (10இல்) சூரியன், செவ்வாய்க்கு திக்பலம் இப்போது இந்த சூட்சமங்களைக் காண்போம் லக்னம் என்பது அந்த ஜாதகரைக் குறிப்பது, குரு ஞானம், நற்சிந்தனை, கொடையுள்ளம் போன்றவற்றைக் குறிக்கின்ற கிரகம், புதன் எழுத்து, கவிதை, கணினி, புத்தி, சாஸ்தர ஞானம் போன்றவற்றை குறிக்கின்ற கிரகம். அதாவது ஒருவர் நல்ல புத்தியையும், தயாள குணத்தையும் இயல்பாகப் பெற்றால் சிறப்பு என்பதையே இந்த இடத்தில் குருவும், புதனும் திக...