சில மாதங்களுக்கு முன்பு தனித்தனி பருக்கையாக உள்ள அரிசி, மாவாக அரைப்படும் போது ஒன்றாக ஆவது குறித்துப் பார்த்தோம்.
அதேபோல், வெல்லம் கட்டியாக உள்ள போது ஒன்றாக இருக்கிறது, அதுவே தூளாக்கினால் தனித்தனியாகப் பிரிகிறது. அதேபோல் தான் நாம் ஒவ்வொருவரும் ஒரே அண்டத்தில் இருந்து உருவாகி, தனித்தனியாகப் பிரிந்து இருப்பது போல் தோற்றம் அளிக்கிறோம். ஆனால் அவ்வெல்லத்தையே மீண்டும் சூடாக்கி பாகு ஆக்கினால் உருகி ஒன்றாகிறது.
இதை குறிப்பதாக நமக்கு சிவபுராணத்தில் ஒரு வரி நினைவில் வருகிறது, "நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே".
இதை நாம் கிருஷ்ணா ஜி கூற்றுப்படி உணரும் போதும் ஒரு தெளிவு ஏற்படுகிறது, "A fragment can never understand the totality, but totality can understand the fragment".
உண்மையில் நாம் சற்று உன்னிப்பாகப் பார்த்தால், சூரியனும், மழையும், எந்த இயற்கைச் சார்ந்த எந்த ஒன்றும் பலன் கருதி செயலை செய்வதில்லை, அன்பின் வெளிப்பாடு அதுவே.
Comments
Post a Comment