கடந்த சில காலமாக நாம் அரசியல் சார்ந்த பதிவுகளை போடுவதில்லை, கிருஷ்ணாஜியின் தாக்கத்தால், ஏனெனில் அரசியல் ஒரு எல்லைக்கு மேல் மக்களை பிரித்து ஆளவே பயன்படுகிறது ஒவ்வொரு இயக்கத்தாலும் தங்களுக்கு ஏற்றாற் போல். வலது என்றால் இடது முளைக்கும், இடது என்றால் வலது முளைக்கும். மனிதர்கள் முழுமையாக ஒன்றினைய அனைத்து அடையாளங்களையும் துறந்தால் மட்டுமே சாத்தியம். இருப்பினும் 75வது சுதந்திர தினத்தின் நினைவாக பெரும் பகுதியினரிடம் இருந்து மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட ஒரு பிரதமருக்கான நன்றியுரையாக இப்பதிவினை தொடர்கிறோம். இவருக்கு முன்னால் இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஆட்சிகள், இவருக்கு பின்னால் நான்காண்டுகளில் நான்கு ஆட்சிகள், நடுவில் இவருடைய ஐந்தாண்டு ஆட்சி. இது அந்த காலகட்டத்தில் இருந்த நிலையற்ற அரசியல் தன்மையையும், அவரின் அரசியல் சாதுர்யத்தையும் காட்டுகின்றது. இவர் பிரதமராக பதவி ஏற்ற போது இன்று ஏறக்குறைய இலங்கையில் இருக்கும் பொருளாதார சூழல் போன்றது, நாடு அன்று மிகவும் நெருக்கமாக இருந்த சோவியத் யூனியன் விழுந்த தருணம், வளைகுடா யுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம், கட்சியின் தலைவர் த...