ஏறக்குறைய நவம்பர் மாதம் நிறைவுப்பெற போகிறது. நாமும் இந்த மாத முதல் நாளிலும், மத்தியலும் இரண்டு மூன்று முறை இந்த மாதம் பதிவு எழுதுவதில்லை என்று கூறிவிட்டு பல பதிவுகளைப் போட்டுவிட்டோம் 😂. எழுத வேண்டாம் என்று நினைத்தால் தான் சில வித்தியாசமான நல்ல சிந்தனைகள் ஊற்று எடுக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம் மனம் சார்ந்த பதிவுகளை பொது வெளியில் போடும் அளவிற்கு நமக்கு தகுதியும், பக்குவமும் உள்ளதா என்ற தெரியவில்லை. மனதைச் யார் சற்று உற்று நோக்கி இருந்தாலும் இதைப் போலவே நிச்சயமாக உதித்து இருக்கும், இருப்பினும் அவர்கள் அடக்கமாக, அமைதியாக இருக்கலாம். ஆனால், இச்சிந்தனைகளின் நறுமணத்தை நுகர்ந்தப் பிறகு இதை நம்மோடு வைத்துக்கொள்ள மனம் வருவதில்லை, அதன் காரணமாகவே முகநூலிலும், சுட்டுரையிலும் பதிவு இடுகிறோம். உண்மையில் அமைதியை சொற்களால் விவரிக்க முடியாது. அமைதி படித்து தெரிந்து கொள்வதல்ல, உணர்ந்து புரிந்து கொள்வது. அமைதியாக இருக்கவே விரும்புகிறோம், அதற்கு மேல் இறைவனின் விருப்பம்!!
Comments
Post a Comment