பொதுவாக ஜோதிடத்தில் பலவிதமான வழிபாட்டு பரிகாரங்கள் உள்ளன, இது ஓரளவிற்கு அனைவரும் கடைப்பிடிக்கும் நடைமுறை. ஆனால், கிரகங்களின் காரகதுவத்தை வைத்து பரிகாரங்கள் செய்யும் நடைமுறை அவ்வளவாக இல்லை, வழிபாட்டு முறைகளுடன் இந்த முறைகளையும் சேர்க்கலாமோ என்று சட்ரென்று தோன்றிய காரணத்தால் இங்கு இதைப் பற்றி விவரிக்கிறோம், நமக்கு எட்டிய வரை, உணர்ந்துக் கொள்ள அனுமதி கிடைத்த வரை. அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையிலும், தசா-புக்தி அடிப்படையிலும், கோச்சார அடிப்படையிலும் எந்த கிரகத்தால் நன்மை விளைய வேண்டுமோ அவர்களுக்கு இந்த வகை பிரகாரங்கள் சமுதாயத்திற்கும் முடிந்த அளவு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்புள்ளது.
சனி - மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் உதவிகள், துப்புரவு பணியாளர்களுக்கு பயன்தரும் வகையில் உதவுவது. முதியவர்களுக்கு உதவுவது.
சுக்கிரன் - உதவி தேவைப்படும் இளம் பெண்களின் திருமண செலவிற்கு உதவுவது. அறிந்ததை பிறருக்கு சொல்லி கொடுப்பது.
குரு - உதவி தேவைப்படும் அந்தணர்கள், கர்ப்பிணிகள் ஆசிரியர்களுக்கு உதவுவது. அறிந்ததை பிறருக்கு சொல்லி கொடுப்பது.
புதன் - உதவி தேவைப்படும் மாணவர்களின் கல்வி செலவை ஏற்பது, ஏதேனும் கல்வி சார்ந்த உதவிகள், உதவி தேவைப்படும் கவிஞர்கள், ஜோதிடர்களுக்கு உதவுவது. - உதவி தேவைப்படும் காவலாளிகளுக்கு ஏற்ற வகையில் உதவது. இரத்ததானம் செய்வது.
சந்திரன் - மனவள பயிற்சி அளிப்பது. தனியாக வயது முதிர்ந்த தாய்மார்களுக்கு உதவுவது.
ஞாயிறு - தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் செலவை ஏற்பது.
கேது - உதவி தேவைப்படும் கிறஸ்தவர்களுக்கு உதவுவது. சாது சன்னியாசிகளுக்கு உணவளிப்பது.
ராகு - உதவி தேவைப்படும் இஸ்லாமியர்களுக்கு உதவுவது.
Comments
Post a Comment