நம்மிடத்தில் இல்லாததைப் பிறரிடத்தில் காணும் போது இயல்பாகவே மனம் ஏக்கம் அடைகின்றது.
ஆனால் இந்த விசித்திர மனித மனம் எப்பொழுதும் எதற்காகவாது ஏங்கிக் கொண்டிருக்கிறது. இது ஒருவரது குணாதிசயம் அல்ல மனித மனத்தின் இயல்பு. நாம் பல முகமூடிகள் போட்டு மறைத்துக் கொள்ளலாம், ஆனால் உள்ளுக்குள் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏங்குபவர் யார் என்று அறியும் வரை இது தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
மனதின் இந்த வாசனைகள் ஒரு ஜென்மத்தோடு மட்டும் சம்பந்தம் உடையதா? இவை மொத்ததையும் விட்டு விலக சில ஜென்மங்கள் ஆகலாம். ஆனால் இப்போது இந்த பூமியை நினைத்தால் தலை சுற்றுகிறது. 100 ஆண்டுகள் கழித்து நினைத்தால்?!
"அவன் அருளலாலே அவன் தாள் வணங்கி"
Comments
Post a Comment