திடீரெனப் பட்டது. ஜோதிடத்தில் ஷட் பல வரிசையில், திக் பலத்திற்கு ஆட்சிக்கு நிகரான பலம் அளிக்கப்பட்டிருக்கின்றது. திக்பலம் திசையை(வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு) அடிப்படையாக வைத்து கூறப்பட்டது என்றாலும், அதன் மேலும் ஒரு சூட்மத்தை அறியும் போது பிர்மிப்பாக உள்ளது. அதே போல், ஒரு கிரகம் அதற்கு திக்பலம் என்று குறிப்படப்பட்டுள்ள இடத்தில் தனியாக திக்பலம், மேலும் அந்த இடத்தில் திக்பலம் கிரகத்துடன் இருந்தாலும் திக்பலம்.
லக்னத்தில் (அதாவது 1இல்) குருவுக்கும், புதனுக்கும் திக்பலம்.
சதுர் கேந்திரத்தில் (4இல்) சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் திக்பலம்
சப்த கேந்திரத்தில் (7இல்) சனிக்கு திக்பலம்
தசம கேந்திரத்தில் (10இல்) சூரியன், செவ்வாய்க்கு திக்பலம்
இப்போது இந்த சூட்சமங்களைக் காண்போம்
லக்னம் என்பது அந்த ஜாதகரைக் குறிப்பது, குரு ஞானம், நற்சிந்தனை, கொடையுள்ளம் போன்றவற்றைக் குறிக்கின்ற கிரகம், புதன் எழுத்து, கவிதை, கணினி, புத்தி, சாஸ்தர ஞானம் போன்றவற்றை குறிக்கின்ற கிரகம். அதாவது ஒருவர் நல்ல புத்தியையும், தயாள குணத்தையும் இயல்பாகப் பெற்றால் சிறப்பு என்பதையே இந்த இடத்தில் குருவும், புதனும் திக்பலம் பெறுவது குறிக்கின்றது.
4ஆம் இடம் சுகங்களைக் குறிக்கும் இடம். சந்திரன் மனது, கருணை, தாயார், ஒரு விதத்தில் காதல் ஆகிய இயல்புகளக் குறிக்கின்ற கிரகம், சுக்கிரன் களத்திரம், அனைத்து வகையான உலக இன்பங்களைக் குறிக்கின்ற கிரகம். எனவே நான்காம் இடத்தில் சுகங்களக் குறிக்கின்ற சந்திரனும், சுக்கிரனும் திக்பலம் அடைவது காட்டுகின்றது.
7ஆம் இடம் களத்திர(அதாவது கணவன் அல்லது மனைவியைக் குறிப்பது) ஸ்தானம், பொது ஜன தொடர்பையும் குறிக்கின்ற இடம், சனிபகவான் எளிமையும், பொது ஜன தொடர்பையும் குறிக்கின்ற கிரகம். எனவே ஒருவர் எளிமையுடன் பழகினால் அனைவருடனும் சுமுகமான உறவு பேண முடியும் என்பதைக் காட்டும் விதமாக சனிபகவன் அங்கு திக்பலம் பெறுகிறார்.
10ஆம் இடம் கர்ம ஸ்தானம், இந்த உலகில் ஒருவரின் தொழிலைக் குறிக்கும் இடம். சூரியன் ஆற்றலுக்கான கிரகம், ஒரு செயலைத் தொடங்கினால் அதை முடித்தே தீர வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்க கூடிய கிரகம். செவ்வாய் தைரிய, வீர, வீரிய, பராக்கிரமத்துக்கு உரிய கிரகம். எனவே ஒருவர் சுயதொழிலோ, பணியிடத்தில் மேற்பார்வையிலோ சிறந்த விளங்க வேண்டும் என்றால் ஆற்றலும், உத்வேகமும், தன்னைச் சார்ந்தவரை திறம்பட வழிநடத்தி, உத்வேகத்துடன் செயல்பட வைக்க வேண்டும். இதைக் குறிக்கும் விதமாக சூரியனும், செவ்வாயும் இங்கே திக்பலம் பெறுகின்றனர்.
Comments
Post a Comment