Skip to main content

Posts

Showing posts from December, 2021

Remembering 2021

 As one starts to write in this blank page with too many thoughts running through his mind without any reason. When the year started one did not know what to expect from it. The month of January one didn't know what the remaining 11 months might bring about, that is what is our essence of life we don't know what tomorrow might bring about, but all that we can do is to give our best 'NOW', which in turn is going to make tomorrow a beautiful place to live.  The months of February and March with some uncertainties and some unexpected instances, and slowly in March the assembly elections started to take over one's mind. He was always a contrarian The months of April and May, the country was going through an unprecedented medical tsunami in the form of second wave, whoever passed it through should certainly be grateful to Guru and God, and pray that everything is taken care to prevent any such instances. Also one had went through some special moments in the month of may.

விடுதலை

 விடுதலையின் தொடக்கம் கொடுப்பதில் உள்ளது, வாங்குவதில் இல்லை. இன்னும் சுருக்கமாக சொன்னால், வாங்கிய கடனைக் கொடுத்து தான் அடைக்க முடியும். நம் வினையாகிய அக்கடனை இறைவன் இருக்கரத்தில் வாங்கிக் கொள்வார் என்று நம்புவோம். நன்றி

Vairagya

 There is always the way if we are ready to walk. Only the impediments created by the mind prevent from seeing the way, those clouds can be blown through 'Dispassion' or the 'Vairagya', then one can see the clear path like a clear sky

கவனித்தலும், கிருஷ்ணாஜியும்

 இன்றோடு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றி ஏதோ ஒரு வகையில் அறிந்து 35 மாதங்கள் ஆகின்றன. ஆனால் அவரது பேச்சின் உண்மை ஆழத்தை அறிந்த கொள்ள, 6 மாதங்களுக்கு முன்பு அவர் பள்ளி குழந்தைகளிடம் பேசுவதைக் கேட்ட பிறகே முழுமையாக புரிந்துக் கொள்ள முடிந்தது. அவரின் பேச்சுகளும், எழுத்துகளும், பதிலுரைகளும் ஒரு ஆழ்ந்த மாற்றத்தை நிச்சயமாக ஒருவனுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.  சரி இதை இங்கே பிதற்றுவதற்கு காரணம் என்ன, நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அறிந்திருக்க வேண்டிய ஒருவரை இந்த உலகம் ஒரு சிறு புள்ளியில் ஓரமாக வைத்திருக்கும் வியப்பில் தான். அவர் கேள்விகளிக்கு பதிலளிக்கும் முறையில் இருந்து கேள்வியை முழுமையாக புரிந்துக் கொள்வதிலையே பதில் உள்ளது என்பது புலப்படுகிறது.   அடுத்த மிக முக்கியமானது உயிர்களிடத்திலும், மனிதர்களிடத்திலும் எதிர்ப்பார்ப்பின்றி அன்பு செலுத்துவதே உண்மையான அன்பு, இல்லையேல் அது வியாபாரம், நம்முடைய வாழ்க்கை முறை ஒரு வகையில் நம்மை வியாபார மையாக யோசிக்க வைத்துவிட்டது.  உதாரணமாக, நாம் பசுவிற்கு வாழைப்பழம் கொடுக்கிறோம், சற்று உற்று நோக்கினால் நமக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டும் என்

அலுப்பு

 நமக்கு அலுப்பு வருவதற்கு காரணமே நினைப்பு தான், காலையிலிருந்து இன்னென்ன பணிகள் தொடர்ந்து செய்தோம், இன்னும் இவ்வளவு பணிகள் செய்யப்பட இருக்கின்றன என்ற மலைப்பே பாதி அலுப்பைத் தருகின்றது.  முழுவதும் அமைதியிருக்கையில் அலுப்பு ஏற்படுவதில்லை.  "சும்மாஇரு சொல்அற", உதட்டுக்கு மட்டும் அல்லாமல் உள்ளத்துக்கும் சேர்ந்து இருந்தால், அதைவிட என்ன இன்பம் இருந்த விட முடியும். இன்னொரு வரியும் தோன்றியது, "வாக்கும் மனமும் இல்லா மனோலயம்". எளிதாக இவை இங்கே எழுதப்பட்டு விடுகின்றன, ஆனால் செயல்படுத்துவதற்கு தான் சிரமமாக உள்ளது. இவையாவும், உணர்ந்த உண்மைகள் மட்டுமே ஆலோசனைகள் அல்ல, நம் மீதே நம்மால் ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை, இதில் பிறர் மீது எந்த விதத்திலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பதை விட வேறென்ன அனர்த்தம் இருக்க முடியும்!

அரும்பு

இவன் பொதுவெளியில் எழுதலாமா? வேண்டாமா? என்பதற்கு இவன் மனதை நோக்குவதில் இப்போது தான் அரும்பாக உள்ளான், மோட்டாகி, பூவாகி இருந்தால் தோன்றுவதை எல்லாம் எழுதி விடலாம். இருப்பினும் இவனுக்கு விதிக்கப்பட்ட கடமை குருவின் கருணையாலும், பரம்பொருளின் கருணையாலும் நிறைவேறும். நாம் வெறும் கருவி மட்டுமே. இந்த வார்த்தை இப்போது பாதி உள்ளத்தோடு வந்தாலும், முழு உள்ளத்தொடு எழுதும் நாள் வரும். இறையருள் காக்கும் 🙏

கடவுளும் மின்சாரமும்

 கடவுளை உள்ளாரா என்று கேட்பவர்கள் சிலர், உள்ளார் என்றால் அறிவது எப்படி என்று நம்மை போல் இருப்பவர் சிலர். கடவுளும் மின்சாரமும் ஒரே தத்துவம் தான் என்று பட்டது, மின்சாரம் கண்ணுக்கு தெரிவதில்லை, ஆனால் மின்விளக்கை நம்மால் பார்க்க முடிகிறது. 

இது போதும் - புத்தகம்

பொதுவாக புத்தகங்களைப் பற்றி இங்கு எழுதுவதில்லை. ஆனால், பாலகுமாரன் ஐயாவின் இந்த புத்தகத்தைக் குறிப்பிட வேண்டும் என்பது உள்ளுணர்வின் உந்துதலும், சில அறிகுறிகளும். இன்று தான் இந்த புத்தகம் கிடைத்தது, இப்போது தான் தொடங்கினாலும், ஆனால் பல முக்கியமான மனதை உற்று நோக்கும் ஆழமான, ஆனால் எளிமையான பாணியிலுள்ள கருத்துகள் இருக்கும் பொக்கிஷம் என்றே புலப்படுகிறது. உண்மையில் அகந்தையை அழிப்பதே ஆன்மீகத்தின் ஆரம்பம். ஆனால், அவ்வளவு சீக்கிரம் அகந்தையும், மனதின் வாசனைகளும் நம்மை விட்டு விலகாது, இதை நாம் பல சமயங்களில் சொந்த அனுபவத்தில் கண்டுவருகிறோம். நாம் அகந்தையை விட்டு விட வேண்டும் என்று நினைக்கும் போது தான், சில சந்தர்ப்பங்கள் அதை தூண்டி விட கூடிய வகையில் அமைகிறது. இதற்கு காரணம் நம் கர்ம வினைகளே என்று இவன் கருதிக் கொள்வது. ஒரு எல்லை வரை இதைக் கடக்கப் பக்தியே ஒருவனுக்கு உதவும் என்பது இவனின் அபிப்பிராயம்.  கிருஷ்ணாஜியின் பேச்சுகளும், எழுத்துகளும் பொதுப்படையாகப் பார்க்கும்  போது கூர்மையாகத் தெரிந்தாலும், நம்மை ஆழமாகத் தோண்டி பார்க்கவே அந்தக் கூர்மைப் பயன்படுகிறது. எதற்கும் துணிந்தவர்களுக்கு, பல பிறவிகளில் த