நமக்கு அலுப்பு வருவதற்கு காரணமே நினைப்பு தான், காலையிலிருந்து இன்னென்ன பணிகள் தொடர்ந்து செய்தோம், இன்னும் இவ்வளவு பணிகள் செய்யப்பட இருக்கின்றன என்ற மலைப்பே பாதி அலுப்பைத் தருகின்றது.
முழுவதும் அமைதியிருக்கையில் அலுப்பு ஏற்படுவதில்லை.
"சும்மாஇரு சொல்அற", உதட்டுக்கு மட்டும் அல்லாமல் உள்ளத்துக்கும் சேர்ந்து இருந்தால், அதைவிட என்ன இன்பம் இருந்த விட முடியும்.
இன்னொரு வரியும் தோன்றியது,
"வாக்கும் மனமும் இல்லா மனோலயம்".
எளிதாக இவை இங்கே எழுதப்பட்டு விடுகின்றன, ஆனால் செயல்படுத்துவதற்கு தான் சிரமமாக உள்ளது.
இவையாவும், உணர்ந்த உண்மைகள் மட்டுமே ஆலோசனைகள் அல்ல, நம் மீதே நம்மால் ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை, இதில் பிறர் மீது எந்த விதத்திலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பதை விட வேறென்ன அனர்த்தம் இருக்க முடியும்!
Comments
Post a Comment