இன்றோடு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றி ஏதோ ஒரு வகையில் அறிந்து 35 மாதங்கள் ஆகின்றன. ஆனால் அவரது பேச்சின் உண்மை ஆழத்தை அறிந்த கொள்ள, 6 மாதங்களுக்கு முன்பு அவர் பள்ளி குழந்தைகளிடம் பேசுவதைக் கேட்ட பிறகே முழுமையாக புரிந்துக் கொள்ள முடிந்தது. அவரின் பேச்சுகளும், எழுத்துகளும், பதிலுரைகளும் ஒரு ஆழ்ந்த மாற்றத்தை நிச்சயமாக ஒருவனுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. சரி இதை இங்கே பிதற்றுவதற்கு காரணம் என்ன, நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அறிந்திருக்க வேண்டிய ஒருவரை இந்த உலகம் ஒரு சிறு புள்ளியில் ஓரமாக வைத்திருக்கும் வியப்பில் தான். அவர் கேள்விகளிக்கு பதிலளிக்கும் முறையில் இருந்து கேள்வியை முழுமையாக புரிந்துக் கொள்வதிலையே பதில் உள்ளது என்பது புலப்படுகிறது.
அடுத்த மிக முக்கியமானது உயிர்களிடத்திலும், மனிதர்களிடத்திலும் எதிர்ப்பார்ப்பின்றி அன்பு செலுத்துவதே உண்மையான அன்பு, இல்லையேல் அது வியாபாரம், நம்முடைய வாழ்க்கை முறை ஒரு வகையில் நம்மை வியாபார மையாக யோசிக்க வைத்துவிட்டது.
உதாரணமாக, நாம் பசுவிற்கு வாழைப்பழம் கொடுக்கிறோம், சற்று உற்று நோக்கினால் நமக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டும் என்று தானே கொடுக்கிறோம். இங்கே அன்பு நமக்கு லட்சுமி கடாட்சத்தின் மீதா, அல்லது பசுவின் மீதா என்பது தான் கேள்வி. உண்மையில் பெரும்பான்மைக்கு பசுவை விட ஐஸ்வர்யங்கள் மீதே அன்பு அதிகம். இதே மனித வாழ்வியலிலும், மற்றவையுலும் பொருந்தி வரும். இந்த உலகம் மனிதர்களுக்கு ஆனது மட்டும் இல்லை, எல்லா ஜீவராசிகளுக்கும் ஆனது. இதை நாம் கடந்த 100 வருடத்தில் குறிப்பாக, 50 வருடத்தில் மறந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.
நமக்கு தேவைகளைக் கண்டு பயம், இதன் காரணமாகவே எதன் மீதாவது பற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு இவனும் விதிவலக்கு அல்ல, இப்போதும் அல்ல. விதம்விதமான பிரார்த்தனைகள், வழிபாடுகள் பல நேரங்களில் வழியின்றி தவித்த போது அவைக் கறை சேர்க்கின்றன. தேர்வில் சென்டம் வாங்க ஒரு பிரார்த்தனை யுக்தி என்று நீண்டு கொண்டே போகிறது. இவை வாழ்க்கையில் ஒரு பகுதி.
ஆனால் இவற்றை கடந்து வாழ்வு என்ன அது எங்கே தொடங்குகிறது என்று யோசிக்கும் போது, கிருஷ்ணாஜியின் பேச்சுகளும், எழுத்துகளும் ஒருவருக்கு உதவ கூடும். இந்த உலகுக்கு உங்கள் செய்திதான் என்ன பலமுறை அவரிடம் வினவப்பட்ட போது, ஒரு செய்தியும் இந்த பேச்சுகள் உங்களை உள்ளுக்குள் பார்க்க ஒரு கண்ணாடி தான் உங்களை உங்களால் பார்த்துக் கொள்ள முடியும் போது இந்தக் கண்ணாடியை தூக்கி போட்டு விடலாம். இதை இப்படியும் கூறலாம் என்று தோன்றுகிறது, ஒரு ரூப் போட பத்து நாள் அதற்கு முட்டு தேவைப்படுகிறது, ஆனால் அதற்கு பின்னால் அது தன்னால் நின்று விடுகிறது. நம் மனம் நமக்கு ஒரு கண்ணாடி, அதில் ஒன்று தான் இரண்டாக தெரிகிறது, அகம்பாவம், கர்மவினைகள் என்று பல அழுக்குகள் அதை மூடிக் கொண்டிருக்கின்றன. இவற்றை விலக்கி பின் உள்ள உண்மையை அறிய இறையருளே துணைநிற்கும்.
குறிப்பாக அவர் அடிக்கடி கூறும் ஒரு வாக்கியம், தேடல் நிற்கும் போது தான் தெளிவு ஏற்படும். இதற்கு முதலில், எழும் எண்ணங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் அவற்றை எதிர்காமலும், ஆமோதிக்காமலும். மனம் ஒரு மாயசக்தி, இப்படி கவனிக்கும் போது நம்மை ஒரு அவதார புருஷர் போலவும், நாட்டின் பிரதமர் போலவும், ஒரு பிறவியில் பேரரசனாக இருந்தது போல் கூட வண்ணவண்ணமாக சித்தரிக்க கூடும். நாம் எதன் மீது அதீத பற்று வைத்து உள்ளலோமோ இதை சுற்றி சிறகடிக்கும். இவை யாவும் மதி மயக்கம். இவற்றை கடக்க இறையருளே துணை நிற்கும், துணை நின்றால் தான் உன்னிப்பாக கவனிக்க முடியும். இதற்கு ஜோதிட ரீதியாகவும் காரணங்கள் நிருபிக்க முடியும், பிரதானமாக கேது, சனி, குரு அமைப்புகளை வைத்து சொல்ல முடியும் என்று கேள்விப் பட்டிருக்கிறான், இதற்கு துணை அமைப்புகளாக 5ஆம் இடமும், 9ஆம் இடமும் இருக்க வேண்டும் என்பது இவன் அபிப்பிராயம், அது தவறாகவும் இருக்கலாம் சரியாகவும் இருக்கலாம்.
உண்மையில், கிருஷ்ணாஜியின் ஜாதகத்தைக் காண நேர்ந்த போது வியப்பாகி அதிர்ந்து போனேன். வேத ஜோதிடத்தில் கூறப் பட்டுள்ள பன்னிரண்டில் கேது இருப்பது மோட்சம் பொருந்தி வருவதும், உச்சனை உச்சன் பார்த்தால் என்று ஒரு வசனம் உள்ளது, இரண்டாம் இடத்தில் சனி, 8இல் சூரியன் உச்சமாக இருந்து இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள். இதனால் தான் என்னமோ பணத்தின் பேரிலும், குடும்பத்தின் பேரிலும் அவருக்கு எந்தப் பற்றும் இல்லாமல் இருக்க முடிந்ததோ என்னமோ. ஆனால், குரு பார்வை வாங்கிய சனிபகவானின் நல்ல தாக்கத்தால் நேர்மை, பேச்சில் கூர்மை இருந்ததையும் காண முடிகிறது. இவன் அரும்பாக உள்ள ஜோதிட ஆர்வலர் மட்டுமே ஜோதிடரல்ல எனவே பிழை இருப்பின் மன்னித்துக் கொள்ளவும். ஆனால் இந்த ஜோதிட அமைப்புகளே ஒருவனின் கர்மாவினாலோ, இறைவனின் விருப்பத்தினாலோ ஏற்படுவது என்பது இவனின் திடமான எண்ணம்.
மேலும் "Order of the star" என்று 40,000 பேர் கொண்ட அன்னி பெசன்ட் அம்மையாரால் நிறுவப்பட்ட அமைப்பின் தலைவராக கிருஷ்ணாஜி இருந்தார், ஐரோப்பாவில் பல சொத்துக்கள் இருந்தன இன்றைய மதிப்பில் பல ஆயிரம் கோடியில் இருக்கும். 1929ஆம் ஆண்டு அந்த அமைப்பை முழுவதும் கலைத்து, கொடுத்தவர்களக்கே அந்த சொத்துக்களைத் திருப்பி கொடுத்தார். அப்போது, "Truth is a pathless land" என்று அவர் பேசிய உரை மிகப்பிரபலமானது.
இவ்வளவு தூரம் வாசித்து இருந்தால் உங்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி கூறிக்கொள்கிறேன்.
இங்கே விதை விதைக்கப் பட்டுவிட்டது, அது இன்று இல்லையேனும் ஒரு நாள் நிச்சயம் இறைவனின் கருணையால் விருட்சம் ஆகும் என்று திடமாக நம்புகிறோம்.
Comments
Post a Comment