Skip to main content

Posts

புத்தியும் புதனும்

 முந்தைய பதிவில் இரண்டு கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும் குணநலன்களை பார்த்தோம், இந்த பதிவில் புத்திகாரகனான புதனின் ஆதிக்கத்தில் உள்ள குணநலன்களை பார்ப்போம். புதன் என்றாலே புத்தி என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். கணிதம், ஜோதிடம், கணினி சார்ந்த துறைகள், கவிதை, எழுத்து, பேச்சு சாதுர்யம் இவை அனைத்துக்கும் புதனே முதன்மையாக ஆதிக்கம் செலுத்தபவர். புதனின் வயதாக குறிப்பிடப்படுவது 12 வயதுக்குள்ள குழந்தை பருவம். இதை நாம் இன்னொரு கண்ணொட்டத்தில் பார்க்கும் போது குழந்தைகளுக்கு தான் "Curiosity" அதிகம் இருக்கும், இது எப்படி வேலை செய்கிறது, அது எப்படி வேலை செய்கிறது என்று. "Curiosity" உள்ளவர்கள் ஆழமாக கற்க முடியும்.  என்ன நடக்க போகிறது என்பதற்கு மட்டும் ஜோதிடத்தை பயன்படுத்தாமல் ஏன் நடக்கிறது என்று உணரும் பல உண்மைகள் தெளிவாகப் புலப்படுகிறது!! நன்றி!!

விடாமுயற்சியும், வேகமும்

 இந்தப் பதிவை சனிக்கிழமை காலை சனி ஹோரையில் எழுதியதும் வியப்பு. ஏனெனில், ஒரு செயலை தொடங்கி நெடுநாட்கள், நெடுவருடங்கள் அதை தொடர்ந்து செய்வதற்கு, பிறந்த ஜாதகத்தில் சனிபகவானின் வலிவு முக்கியம். 'The art of perseverance' comes with the strength of Saturn. குறிப்பாக, அரசியலிலும், பல விதமான காரணங்களுக்காக போராடுபவர் ஜாதகத்தில் சனிபகவான் வலுத்திருக்க கூடும். தொடர்ந்து போராடும் மனோ திடத்தை கொடுக்க வல்லவர் சனிபகவான். இதே, துடுக்காக செயல்பட வைப்பவர் செவ்வாய் பகவான். ஆகையால். நான் கிரகங்களை வயது வாரியாக பார்க்கும் போது, செவ்வாய் பகவானுக்கு பதின்ப வயது முதல் உள்ள இளமை காலத்தையும், சனிபகவானுக்கு முதுமை காலத்தையும் வயதுகளாக அடையாள படுத்திருக்கின்றனர். இளங்கன்று பயமறியாது என்பது போல் செவ்வாய் வலுத்தவர்கள் துடிப்பாக இருப்பார்கள். 100 மீட்டர் பந்தயத்தில் ஓடி வெல்ல வைப்பவர் செவ்வாய், மராத்தான் பந்தயத்தில் ஓடி வெல்லப் வைப்பவர் சனிபகவான். இதில் மற்ற கிரகங்களையும், ஸ்தானங்கைளயும் பொறுத்து இந்த வேகமும், விடாமுயற்சியும் நல்லது அல்லாததுக்கும் பயன்படலாம், நல்லதுக்கும் பயன்படலாம். நன்றி!!

தீபாவளிகளும் பட்டாசுகளும்

 பொதுவாகவே தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புத்தாடைகளும், இனிப்புகளும். இதில் மீதி இரண்டும் மற்ற ஜிவராசிகளுக்கு இடையுறாக இல்லை.   இதில் பட்டாசு கொண்டாட்டம் மட்டும், இந்த உலகில் மனித இனம் மட்டுமே வாழ்கிறது என்ற எண்ணத்தில் சில மனிதர்கள் அளவுக்கு அதிகமான ஒலியை எழுப்புக் கூடிய பட்டாசுகளை நாள் முழுவதம் வெடிக்க செய்கின்றனர். மென்மையான உணர்வு புலன்களை கொண்ட குருவி போன்ற சிறு உயிரனங்கள், கால்நடைகளும் ஒரு நாட்களுக்கு தன்  நடமாட்டத்தையும் உணவுகளையும் விட்டு  மறைந்துவிடுகின்றன.  கரோனா காலகட்டத்தில் முழு பொதுஅடைப்பு போடப்பட்ட போது நாம் வாழ்வியல் ரீதியாக எத்தனை முறையிடுதல் செய்தோம். நம் கொண்ட்டாங்கள் என்றும் பிறருக்கு திண்டாட்டமாக இருந்து விடக்கூடாது. மனிதனின் கண்ணோட்டத்தில் மட்டும் நாம் உலகைப் பார்த்து பழகிவிட்டோம், பிற உயிர்கள் வழியே நமக்கு பார்க்க தெரிவதில்லை.  மேலும் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசு என்று ஒரு புறம், இருப்பினும் நாம் தினமும் தான் வாகனங்கள் மூலம் பூமியை வெப்பம் அடைய செய்கின்றோம்.   பட்டாசுகள் பல குடும்ப வாழ்வாதாரத்தோடு சம்பந்...

வேதாந்தம்

 "தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்" உண்மையில் வேதாந்தின் அர்த்தம் வேதம்+அந்தம்(இறுதி), வேதித்தின் இறுதி பகுதியாக உள்ள மோஷக்சத்தை பற்றி விளக்கும் உபநிஷத்துகளை குறிப்பிடவதாகவும் உள்ளது. ஆங்கிலத்தில் வேதாந்தம், 'The Ending of Knowledge', நாம் கற்ற அனைத்தையும் மெய்மறந்து மோன நிலையான சமாதி நிலையில் கலப்பது. சமயங்களில் நமக்கு விருப்பமான உணவை உண்ணும் போதோ, விருப்பமான செயலை செய்யும் போதோ மெய் மறந்து போய்யிட்டோம் என்று சொல்வதுண்டு. இம்மோன நிலையையே நமக்கு சிவபுராணம், விநாயகர் அகவல் போன்ற பாடல்களில் வரும் வரிகள் உணர்த்துகின்றன.  நான் யார் என்று உண்மையில் அறிவதற்கு நம்முடைய வாசனைகள் மொத்தம் மறையும் போது சாத்தியம் ஆகிறது. இது ஒரு பிறவியில் மறையக்கூடியதா, அடியேனுக்கு தெரியாது. நாம் ஒரு தூரமுள்ள ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரே பேருந்தில் செல்லலாம், பல பேருந்துகள் மாறி செல்லலாம், மகிழுந்துவில் செல்லலாம் இவை அனைத்தும் நம் கர்மவினை கணக்கை பொருத்தது, எவ்வளவு விரைவாக சேருகிறோம் என்று. இங்கே குறிப்பிடுவது உடலுக்கான முடிவல்ல, மனதின் வாசனை முடியவில்லை என்றால் ...

The Urban Embracement

 Recently, the talking or trolling point has become the Bangalore rains. It is quite interesting to note that we are mocking something that we have built ourselves which is equal to mocking ourselves.  We have embraced the urban model of development for sometime now, crowded apartments, crowded roads are not something new, if we see the ads on television or paper, we are only adding ourselves to the existing capacity of the city. Then suddenly we mock each city when the turn comes.   I could recollect Krishnaji's phrase, "The means is not different from the end", in the same way our needs, we have created what it is today. And our wants and the economic model is in a way only looks for ways to expand the current metropolitan cities, and the expansion and the utilities provided by these are a lifeline to many people including oneself for many years now.   During the pandemic we were thinking of alternate models Tier-2, Tier-3 cities and towns, but in the las...