இந்தப் பதிவை சனிக்கிழமை காலை சனி ஹோரையில் எழுதியதும் வியப்பு. ஏனெனில், ஒரு செயலை தொடங்கி நெடுநாட்கள், நெடுவருடங்கள் அதை தொடர்ந்து செய்வதற்கு, பிறந்த ஜாதகத்தில் சனிபகவானின் வலிவு முக்கியம்.
'The art of perseverance' comes with the strength of Saturn.
குறிப்பாக, அரசியலிலும், பல விதமான காரணங்களுக்காக போராடுபவர் ஜாதகத்தில் சனிபகவான் வலுத்திருக்க கூடும். தொடர்ந்து போராடும் மனோ திடத்தை கொடுக்க வல்லவர் சனிபகவான்.
இதே, துடுக்காக செயல்பட வைப்பவர் செவ்வாய் பகவான். ஆகையால். நான் கிரகங்களை வயது வாரியாக பார்க்கும் போது, செவ்வாய் பகவானுக்கு பதின்ப வயது முதல் உள்ள இளமை காலத்தையும், சனிபகவானுக்கு முதுமை காலத்தையும் வயதுகளாக அடையாள படுத்திருக்கின்றனர். இளங்கன்று பயமறியாது என்பது போல் செவ்வாய் வலுத்தவர்கள் துடிப்பாக இருப்பார்கள்.
100 மீட்டர் பந்தயத்தில் ஓடி வெல்ல வைப்பவர் செவ்வாய், மராத்தான் பந்தயத்தில் ஓடி வெல்லப் வைப்பவர் சனிபகவான்.
இதில் மற்ற கிரகங்களையும், ஸ்தானங்கைளயும் பொறுத்து இந்த வேகமும், விடாமுயற்சியும் நல்லது அல்லாததுக்கும் பயன்படலாம், நல்லதுக்கும் பயன்படலாம்.
நன்றி!!
Comments
Post a Comment