"தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம்,
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்"
உண்மையில் வேதாந்தின் அர்த்தம் வேதம்+அந்தம்(இறுதி), வேதித்தின் இறுதி பகுதியாக உள்ள மோஷக்சத்தை பற்றி விளக்கும் உபநிஷத்துகளை குறிப்பிடவதாகவும் உள்ளது.
ஆங்கிலத்தில் வேதாந்தம், 'The Ending of Knowledge', நாம் கற்ற அனைத்தையும் மெய்மறந்து மோன நிலையான சமாதி நிலையில் கலப்பது. சமயங்களில் நமக்கு விருப்பமான உணவை உண்ணும் போதோ, விருப்பமான செயலை செய்யும் போதோ மெய் மறந்து போய்யிட்டோம் என்று சொல்வதுண்டு. இம்மோன நிலையையே நமக்கு சிவபுராணம், விநாயகர் அகவல் போன்ற பாடல்களில் வரும் வரிகள் உணர்த்துகின்றன.
நான் யார் என்று உண்மையில் அறிவதற்கு நம்முடைய வாசனைகள் மொத்தம் மறையும் போது சாத்தியம் ஆகிறது. இது ஒரு பிறவியில் மறையக்கூடியதா, அடியேனுக்கு தெரியாது. நாம் ஒரு தூரமுள்ள ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரே பேருந்தில் செல்லலாம், பல பேருந்துகள் மாறி செல்லலாம், மகிழுந்துவில் செல்லலாம் இவை அனைத்தும் நம் கர்மவினை கணக்கை பொருத்தது, எவ்வளவு விரைவாக சேருகிறோம் என்று.
இங்கே குறிப்பிடுவது உடலுக்கான முடிவல்ல, மனதின் வாசனை முடியவில்லை என்றால் அது அடுத்த பேருந்தில் பயணிக்க தொடங்கும். இப்பயணம் முடிவதற்கு நடக்கும் இவ்வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் முழுமையாக வாழ்வது ஒரு சிறந்த வழி.
Comments
Post a Comment