Skip to main content

Posts

Showing posts from May, 2023

சில சிந்தனைகள்

 கடந்த சில வருடங்களாக மொழிப்பற்று, இனப்பற்று, மதப்பற்று, மண் பற்று ஆகியவை அரசியலின் மைய புள்ளியாக மாறி வருவதை காணமுடிகிறது. ஆனால், உள்ளார்ந்து பார்க்கும் போது மேற்பரப்பில் உள்ள கருத்துக்களை அதுவும் உதட்டு அளவில் பின்பற்றி வருகிறோம். ஏனெனில் நம் வாழ்க்கை முறை இன்று முற்றிலும் மேற்கத்திய முறையில் தான் அமைந்து இருக்கின்றது பெயரளவில் மட்டுமே நாம் இந்தியர்கள், தமிழர்கள். 5000ஆம் ஆண்டு தொன்மையான நம் கலாசாரத்தின் அடிச்சுவடே அறம், பொருள், இன்பம், வீடு (தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்) என்று வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்து வாழ்வது தான், ஆனால் இன்று மேற்கத்திய கலாசாரத்தின் கவர்ச்சி காரணமாக நாம் மரணத்தின் வாயில் வரை இன்பத்தை தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளமே தவிர வீடு அல்லது மோட்சம் என்பதையே ஆராய்வதில்லை. வேதங்களை வரிசைப்படுத்தும் போது இறுதியாக ஞானத்தின் வாயிலான உபநிஷத்துகளை வைத்தனர், ஆனால் ஏனோ இன்று பொருளாசையிலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. நம் உண்மையில் நம் தொன்மையான கலாசாரத்தை ஒன்றி வாழ்ந்தால் இன்று அதிக இயற்கை வள சுரண்டல் போன்றவை ஏற்படாமல் பூமியும் சமநிலையோடு இருக்கும். ஏறக்குறைய பதினைந்து ஆ

அன்பே சிவம்

 இறைவனின் அருள் கிட்டுவதற்கு மிகப் சுலபமான கருவி அன்பு மட்டுமே, ஞானம் பெருவதற்கு அறிவு சில சமயங்களில் தடையாக இருக்கிறது, இதையே மாணிக்கவாசகர் "கல்வி எனும் பல்கடல் பிழைத்தும்" என்று குறிப்பிடுகிறார். கண்ணப்ப நாயனார், சிவலிங்கத்தின் கண்களில் இருந்து இரத்தம் வழிவதை பார்த்தவுடன் தன் பார்வை போய்விடும் என்றும் சிறிதும் கவலைப்படாமல் தன் கண்ணை அப்பினார், இதை விட உயர்வாக இரண்டாவது  கண்ணிலிருந்து இரத்தம் வடிந்தவுடன் தன் காலை சிவலிங்கத்தின் மீது அடையாளமாக வைத்து இரண்டாவது கண்ணையும் பிடுங்க துணிந்தார் அந்த கணத்திலயே சிவபெருமான் தோன்றி அவருக்கு அருள் புரிந்தார்.   இதைப்போலவே, மனித உணவு தான் வேண்டும் என்று சிவனடியார் வடிவில் வந்த பெருமான் கேட்க தான் பெற்ற மகனையே வெட்டி சமைத்து கொடுத்தார் சிறுதொண்ட நாயனார், அவர் அன்பில் மகிழ்ந்த பெருமான் நாயனாரின் மகனை மீட்டு கொடுத்தார்.

ப்ராப்தம்

 நாம் சாலையில் பயணிக்கும் போது, நம்மை சில வாகனங்கள் முந்தி செல்கிறோம், நாம் சில வாகனங்களை முந்தி செல்கிறோம். இதில் வாகனோட்டியின் திறமை ஒரு எல்லை வரையே உள்ளது, ஓட்டும் வாகனத்தின் தன்மையிலேயே மீதி பகுதி உள்ளது. நாம் கடந்த செல்லும் வாகனங்களை ஏளனமாக பார்ப்பதும், நம்மை கடந்து செல்லும் வாகனங்களை ஏக்கத்துடன் பார்ப்பதும் பயனற்ற செயலே. ஏனெனில், சில வாகனங்களின் குறைந்தபட்ச வேகம், மற்ற சில வாகனங்களின் அதிகபட்ச வேகமாக இருக்கலாம், சில வாகனங்களின் அதிகபட்ச வேகம், சில வாகனங்களின் குறைந்தபட்ச வேகமாக இருக்கலாம். இதையே நம் முன்னோர்கள் இவ்வாழ்வில் நமக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை இறைவன் நமக்கு விதித்த ப்ராப்த கர்ம்மமே தீர்மானிக்கிறது என்று தெளிவாக குறிப்பட்டுள்ளனர். இந்த ப்ராப்த்தத்தை நாம் முழு மனதுடன் ஏற்கும் போது மனதிற்கு எல்லை இல்லா அமைதி கிடைக்கிறது.