இறைவனின் அருள் கிட்டுவதற்கு மிகப் சுலபமான கருவி அன்பு மட்டுமே, ஞானம் பெருவதற்கு அறிவு சில சமயங்களில் தடையாக இருக்கிறது, இதையே மாணிக்கவாசகர்
"கல்வி எனும் பல்கடல் பிழைத்தும்" என்று குறிப்பிடுகிறார்.
கண்ணப்ப நாயனார், சிவலிங்கத்தின் கண்களில் இருந்து இரத்தம் வழிவதை பார்த்தவுடன் தன் பார்வை போய்விடும் என்றும் சிறிதும் கவலைப்படாமல் தன் கண்ணை அப்பினார், இதை விட உயர்வாக இரண்டாவது கண்ணிலிருந்து இரத்தம் வடிந்தவுடன் தன் காலை சிவலிங்கத்தின் மீது அடையாளமாக வைத்து இரண்டாவது கண்ணையும் பிடுங்க துணிந்தார் அந்த கணத்திலயே சிவபெருமான் தோன்றி அவருக்கு அருள் புரிந்தார்.
இதைப்போலவே, மனித உணவு தான் வேண்டும் என்று சிவனடியார் வடிவில் வந்த பெருமான் கேட்க தான் பெற்ற மகனையே வெட்டி சமைத்து கொடுத்தார் சிறுதொண்ட நாயனார், அவர் அன்பில் மகிழ்ந்த பெருமான் நாயனாரின் மகனை மீட்டு கொடுத்தார்.
Comments
Post a Comment