நாம் சாலையில் பயணிக்கும் போது, நம்மை சில வாகனங்கள் முந்தி செல்கிறோம், நாம் சில வாகனங்களை முந்தி செல்கிறோம். இதில் வாகனோட்டியின் திறமை ஒரு எல்லை வரையே உள்ளது, ஓட்டும் வாகனத்தின் தன்மையிலேயே மீதி பகுதி உள்ளது. நாம் கடந்த செல்லும் வாகனங்களை ஏளனமாக பார்ப்பதும், நம்மை கடந்து செல்லும் வாகனங்களை ஏக்கத்துடன் பார்ப்பதும் பயனற்ற செயலே. ஏனெனில், சில வாகனங்களின் குறைந்தபட்ச வேகம், மற்ற சில வாகனங்களின் அதிகபட்ச வேகமாக இருக்கலாம், சில வாகனங்களின் அதிகபட்ச வேகம், சில வாகனங்களின் குறைந்தபட்ச வேகமாக இருக்கலாம்.
இதையே நம் முன்னோர்கள் இவ்வாழ்வில் நமக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை இறைவன் நமக்கு விதித்த ப்ராப்த கர்ம்மமே தீர்மானிக்கிறது என்று தெளிவாக குறிப்பட்டுள்ளனர். இந்த ப்ராப்த்தத்தை நாம் முழு மனதுடன் ஏற்கும் போது மனதிற்கு எல்லை இல்லா அமைதி கிடைக்கிறது.
Comments
Post a Comment