பொதுவாகவே தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புத்தாடைகளும், இனிப்புகளும். இதில் மீதி இரண்டும் மற்ற ஜிவராசிகளுக்கு இடையுறாக இல்லை. இதில் பட்டாசு கொண்டாட்டம் மட்டும், இந்த உலகில் மனித இனம் மட்டுமே வாழ்கிறது என்ற எண்ணத்தில் சில மனிதர்கள் அளவுக்கு அதிகமான ஒலியை எழுப்புக் கூடிய பட்டாசுகளை நாள் முழுவதம் வெடிக்க செய்கின்றனர். மென்மையான உணர்வு புலன்களை கொண்ட குருவி போன்ற சிறு உயிரனங்கள், கால்நடைகளும் ஒரு நாட்களுக்கு தன் நடமாட்டத்தையும் உணவுகளையும் விட்டு மறைந்துவிடுகின்றன. கரோனா காலகட்டத்தில் முழு பொதுஅடைப்பு போடப்பட்ட போது நாம் வாழ்வியல் ரீதியாக எத்தனை முறையிடுதல் செய்தோம். நம் கொண்ட்டாங்கள் என்றும் பிறருக்கு திண்டாட்டமாக இருந்து விடக்கூடாது. மனிதனின் கண்ணோட்டத்தில் மட்டும் நாம் உலகைப் பார்த்து பழகிவிட்டோம், பிற உயிர்கள் வழியே நமக்கு பார்க்க தெரிவதில்லை. மேலும் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசு என்று ஒரு புறம், இருப்பினும் நாம் தினமும் தான் வாகனங்கள் மூலம் பூமியை வெப்பம் அடைய செய்கின்றோம். பட்டாசுகள் பல குடும்ப வாழ்வாதாரத்தோடு சம்பந்...