பொதுவாகவே மனம் அது சம்பந்தப்பட்ட அனைத்தின் வாசனைகளையும் சுமந்து கொண்டே இருக்கிறது, சில சமயங்களில் அது ஜென்மங்கள் தாண்டியும் தொடர்கிறது.
சில உதாரணங்களை பார்ப்போம், நாம் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம், அதில் வரும் காட்சிகள் நமக்கு பிடித்துவிட்டால், நாம் நிகழ்வில் காணும் சிலதுடன் அவற்றை பொருத்திப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
இரண்டாவது, பூர்வ ஜென்ம வாசனை, அறிமுகமே இல்லாத சிலரை நாம் பார்க்கும், அவருடன் ஏற்கனவே எங்கோ பழகியது போல் நம் ஆழ்மனதில் தோன்றும்.
மூன்றாவது, நாம் சில செய்திகள் பார்க்கலாம் நான்கு வயது சிறுமி/சிறவன் மிக அபாரமாக வரைகிறார், பாடுகிறார் என்று.
நமக்கும் சில கலைகள் இயல்பாகவே வரலாம், இவை அனைத்தும் பூர்வ ஜென்ம வாசனை, இதை நாம் ஜோதிடத்தில் ஐந்தாம் இடத்தோடு தொடர்புபடுத்தியும் பார்க்கலாம், சந்திரன் நம் மனதை இயக்கினாலும், பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடம், நம் மனத்துடனும், புத்தியுடனும் சம்பந்தம் கொண்டது.
இப்பதிவை எழுத அனுமதித்து வழிகாட்டிய பரம்பொருளுக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறோம்.
Comments
Post a Comment