Skip to main content

Posts

காதல்

 சமீப காலமாக நாம் எந்த தலைப்பை பற்றியும் பெரிதாக எழுதவில்லை. காதலர் தினம் நெருங்கி வருவதால் காதல் பற்றி எழுதலாம் என்ற நினைப்பு. தனிப்பட்ட முறையில் தினங்களை அனுசரிப்பது நம் வழக்கம் இல்லாவிட்டாலும் தலைப்பிற்கு அது பயன்படுகிறது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ரசித்து வாழ வேண்டியது, வருடத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் நாம் அனுசரிப்பது என்பது, பத்து நாட்கள் ஏதும் சாப்பிடாமல், ஒரே நாளில் நாற்பது இட்லி சாப்பிட முயற்சிப்பது போல. நாட்களை வணிக மயமாக்கவே இது போன்ற யுத்திகள் பயன்படுத்த படுவதாக நம்  எண்ணம். சரி தலைப்பிற்குள் நுழைவோம். நம் முகநூல் பக்கத்தில் அதிகம் எழுதபடாத ஒரு தலைப்பு. காதல் என்பது இளைஞர்களின் விருப்பமான வார்த்தையாக உள்ளது. காதல் என்ற உடனே சினிமா காட்சிகளும், பாடல்களும் பிரதானமாக நினைவிற்கு வரும் அளவிற்கு அவை ஊடுருவி இருக்கின்றன. காதல் எனும் உணர்ச்சி உயிர் இனங்கள் தோன்றிய முதலே உள்ள உணர்ச்சி, ஆனால் திரையில் நாம் காதலை காணுவது என்பது அதிகபட்சம் 100 ஆண்டுகளுக்கு உள்ளாக தான் இருக்க முடியும். இதை நாம் அழுத்தமாக குறிப்பிட வேண்டியதற்கான காரணம், காதல் எனும் உணர்ச்சியை நாம் முழுமையாக ...

மன சஞ்சலம்

 நாம் ஏதோ ஒன்றை இறுகுப்பற்று கொண்டே இருகக வேண்டும் என்று நினைக்கிறோம், அந்த ஒன்று ஒவ்வொரு சூழ்நிலைகளும், வயதுகளிலும் மாறுபடுகிறது. ஒரு சிறிய குழந்தை பொம்மைகளை பிடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது. ஒரு வாலிபன் பருவ இன்பங்களை பிடித்துக் கொள்கிறான். இந்த இன்பங்கள் என்றும் தொடர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இவை கிடைக்குமா, கிடைக்காத என்ற எண்ணமே அஞ்சலத்தின் அடிசுவடு.    மனம் சஞ்சலம் கொள்வதற்கு முக்கிய காரணி அடுத்தென்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து எண்ணுவது தான். ஒரு செயலை செய்து கொண்டே இருக்கும் போதே, அடுத்த நடக்கவிருக்கும் செயலை அல்லது செயல் திட்டத்தை யோசிப்பதே மன சஞ்சலத்தின் ஆரம்பம. பல நடக்காத கற்பனைகளைளும் மனம் படம் போட்டு கொண்டிருக்கிறது, அதுவே சஞ்சலத்திற்கு காரணம். மனம் என்பது நிலையற்றது. ஓடும் நீரோடை போன்றது. மனம் எது? மூளை எது? சிந்தனை கடல் எங்கிருந்து உருவாகன்றது என்று அறிந்து சிந்தனையின் ஆதாரத்திற்கு செல்வதே மனதை அமைப்படுத்தும் ஒரே மருந்து. இதற்கு பல வழிமுறைகள் கூறப்ட்டுள்ளன, பக்தியுடன் ஒன்றுவது, கர்மத்துடன் ஒன்றுவது, ஞானத்தோடு ஒன்றுவது, தியானத்தோடு ஒன்ற...

சித்த சுத்தி

 ஒரு அழுக்கான துண்டு நன்றாக துடைத்தப்பின் எப்படி சுத்தம் அடைகின்றதோ, மாசான மனது இறையருள் கிட்டும் போது சித்த சுத்தி அடைகின்றது. 

புத்தியும் புதனும்

 முந்தைய பதிவில் இரண்டு கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும் குணநலன்களை பார்த்தோம், இந்த பதிவில் புத்திகாரகனான புதனின் ஆதிக்கத்தில் உள்ள குணநலன்களை பார்ப்போம். புதன் என்றாலே புத்தி என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். கணிதம், ஜோதிடம், கணினி சார்ந்த துறைகள், கவிதை, எழுத்து, பேச்சு சாதுர்யம் இவை அனைத்துக்கும் புதனே முதன்மையாக ஆதிக்கம் செலுத்தபவர். புதனின் வயதாக குறிப்பிடப்படுவது 12 வயதுக்குள்ள குழந்தை பருவம். இதை நாம் இன்னொரு கண்ணொட்டத்தில் பார்க்கும் போது குழந்தைகளுக்கு தான் "Curiosity" அதிகம் இருக்கும், இது எப்படி வேலை செய்கிறது, அது எப்படி வேலை செய்கிறது என்று. "Curiosity" உள்ளவர்கள் ஆழமாக கற்க முடியும்.  என்ன நடக்க போகிறது என்பதற்கு மட்டும் ஜோதிடத்தை பயன்படுத்தாமல் ஏன் நடக்கிறது என்று உணரும் பல உண்மைகள் தெளிவாகப் புலப்படுகிறது!! நன்றி!!

விடாமுயற்சியும், வேகமும்

 இந்தப் பதிவை சனிக்கிழமை காலை சனி ஹோரையில் எழுதியதும் வியப்பு. ஏனெனில், ஒரு செயலை தொடங்கி நெடுநாட்கள், நெடுவருடங்கள் அதை தொடர்ந்து செய்வதற்கு, பிறந்த ஜாதகத்தில் சனிபகவானின் வலிவு முக்கியம். 'The art of perseverance' comes with the strength of Saturn. குறிப்பாக, அரசியலிலும், பல விதமான காரணங்களுக்காக போராடுபவர் ஜாதகத்தில் சனிபகவான் வலுத்திருக்க கூடும். தொடர்ந்து போராடும் மனோ திடத்தை கொடுக்க வல்லவர் சனிபகவான். இதே, துடுக்காக செயல்பட வைப்பவர் செவ்வாய் பகவான். ஆகையால். நான் கிரகங்களை வயது வாரியாக பார்க்கும் போது, செவ்வாய் பகவானுக்கு பதின்ப வயது முதல் உள்ள இளமை காலத்தையும், சனிபகவானுக்கு முதுமை காலத்தையும் வயதுகளாக அடையாள படுத்திருக்கின்றனர். இளங்கன்று பயமறியாது என்பது போல் செவ்வாய் வலுத்தவர்கள் துடிப்பாக இருப்பார்கள். 100 மீட்டர் பந்தயத்தில் ஓடி வெல்ல வைப்பவர் செவ்வாய், மராத்தான் பந்தயத்தில் ஓடி வெல்லப் வைப்பவர் சனிபகவான். இதில் மற்ற கிரகங்களையும், ஸ்தானங்கைளயும் பொறுத்து இந்த வேகமும், விடாமுயற்சியும் நல்லது அல்லாததுக்கும் பயன்படலாம், நல்லதுக்கும் பயன்படலாம். நன்றி!!

தீபாவளிகளும் பட்டாசுகளும்

 பொதுவாகவே தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புத்தாடைகளும், இனிப்புகளும். இதில் மீதி இரண்டும் மற்ற ஜிவராசிகளுக்கு இடையுறாக இல்லை.   இதில் பட்டாசு கொண்டாட்டம் மட்டும், இந்த உலகில் மனித இனம் மட்டுமே வாழ்கிறது என்ற எண்ணத்தில் சில மனிதர்கள் அளவுக்கு அதிகமான ஒலியை எழுப்புக் கூடிய பட்டாசுகளை நாள் முழுவதம் வெடிக்க செய்கின்றனர். மென்மையான உணர்வு புலன்களை கொண்ட குருவி போன்ற சிறு உயிரனங்கள், கால்நடைகளும் ஒரு நாட்களுக்கு தன்  நடமாட்டத்தையும் உணவுகளையும் விட்டு  மறைந்துவிடுகின்றன.  கரோனா காலகட்டத்தில் முழு பொதுஅடைப்பு போடப்பட்ட போது நாம் வாழ்வியல் ரீதியாக எத்தனை முறையிடுதல் செய்தோம். நம் கொண்ட்டாங்கள் என்றும் பிறருக்கு திண்டாட்டமாக இருந்து விடக்கூடாது. மனிதனின் கண்ணோட்டத்தில் மட்டும் நாம் உலகைப் பார்த்து பழகிவிட்டோம், பிற உயிர்கள் வழியே நமக்கு பார்க்க தெரிவதில்லை.  மேலும் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசு என்று ஒரு புறம், இருப்பினும் நாம் தினமும் தான் வாகனங்கள் மூலம் பூமியை வெப்பம் அடைய செய்கின்றோம்.   பட்டாசுகள் பல குடும்ப வாழ்வாதாரத்தோடு சம்பந்...