நிலவு அல்லது சந்திரன், வெகு நிச்சயமாக அனைத்து குழந்தைகளுக்கும் பிடித்த ஒன்று. சந்திரன் விஞ்ஞான ரீதியாக ஒரு தனிப்பட்ட கிரகம் இல்லை, பூமியின் இயற்கை செயற்கைக்கோள். ஜோதிட ரீதியாகப் பார்த்தால் மனம், அன்னை, கருணை போன்றவை சந்திரனின் காரகத்துவங்கள். குளுமையும் கருணையும் தாய்மையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்ததது, எவ்வளவு பொருத்தமாக நம் முன்னோர்கள், ரிஷிகள் மிகவும் குளுமைப் பொருந்திய சந்திரனை தாய்க்கு காரகனாக வைத்து உள்ளார்கள். இதனால் தான் என்னவோ குழந்தைகள் நிலவை காண்பித்தால் அமைதியாகி விடுகிறார்களோ என்னவோ?!
மிக முக்கியமாக சந்திரனின் மற்றோரு காரகத்துவம் மனம். மனமே நம்மையும், நம் புலன்களையும் இயக்குகிறது. மேலும் புராணங்களில் சந்திரனின் பிள்ளையாக புத்தி காரகனாகிய புதன் குறிப்பிடப்பட்டுள்ளார். முழுமையான கதையை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்காது, வாசகர்கள் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் இக்கதையைப் பற்றி காணலாம். இங்கே புத்தியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால், சந்திரனுக்கு தன் பிள்ளையாகிய புதனைப் பிடிக்கும், ஆனால் புதனுக்கு சந்திரனைப் பிடிக்காது, அதாவது மனதிற்கு புத்தியைப் பிடிக்கும், ஆனால் புத்திக்கு மனதைப் பிடிக்காது என்பது போல் வைத்துக்கொள்ளலாம், மனம் வேகமாக செயலாற்றும் தன்மை உடையதால் ஒரு செயலை உடனடியாக செய்துவிடுகிறது, பிறகு புத்தி அதை எடைப்போட்டு பார்க்கிறது.
சந்திரனை அடிப்படையாகக் கொண்டே ஒருவரின் ராசி அமையப் பெறுகிறது, கோச்சார அடிப்படையிலான ராசிப் பலனும் இதை வைத்தே தீர்மானிக்க படுகிறது. இதை விட மிக துல்லியமான அமைப்புகள் ஆத்மகாரனான சூரியனை அடிப்படையாக கொண்ட லக்னத்தை வைத்தே கூற முடியும், ஏனெனில் லக்னம் உயிர் போன்றது ராசி உடல் போன்றது.
இப்போது நாம் தலைப்பிற்குள் நுழைவோம், சந்திரன் விஞ்ஞான ரீதியில ஒரு தனிப்பட்ட கிரகம் அல்ல பூமியன் இயற்கை செயற்கைக்கோள், அதன் பண்பு பூமியின் சுழற்சியையும், பருவநிலை சமன்படுத்துவதில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் சந்திரனால் இயக்கப்படும் மனமும் நம்மை நாமே பார்க்கும் கண்ணாடியை போன்றது, இதை நம் மனம் வேகமாக உள்ள போது உணரமுடியாது, ஆழ்ந்த அமைதியல் உணரலாம். பொதுவாக பிறக்கும் போதே சந்திரன் வலிமையாக அமையப் பெற்றவர்கள் மன உறுதியும், கருணையும் கொண்டவர்களாக இருப்பார்கள், இந்த கட்டுரை நாம் பலன் காண்பதற்காக எழுதப்படவில்லை, பலன் கூறும் அளவிற்கு இவனுக்கு அனுபவம் உள்ளதா என்றும் தெரியவில்லை, எனவே இங்கு நாம் காண்பது சந்திரனின் இயல்புகள் மற்றும் எவ்வாறு ஜோதிடம் பிரபஞ்சத்தின் இயக்குத்தோடு நம்மை இணைக்கிறது என்பதை காண்பதே ஆகும்.
அதேபோல் மற்ற எந்த கிரகத்துக்கும் இருக்காத ஒரு இயல்பு ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு வடிவத்தில் நமக்கு சந்திரன் காட்சியளிக்கிறார், பெளர்ணமி அன்று சூரியனிடம் இருந்து முழுமையான ஒளியைப் பெற்று, முழு நிலவாக காட்சித்தருகிறார். அதேபோல் பூமியை அதிவேகமாக சுழலும் கிரகம் சந்திரன், 2.25 நாளில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாகிறார், இதைப் பற்றி விரிவாக பின்வரும் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளோம்.
https://tharuns07.blogspot.com/2021/09/the-mind-and-moon.html
இது போன்ற இயல்புகளால் தான் என்னவோ நமக்கு மனம் மட்டும் மற்ற எல்லா அங்கங்களை விட வேகமாக செயல்படும் தன்மை உள்ளதோ?! எடுத்துக்காட்டாக ஒருவர் உணவு அருந்தி முடித்து இருந்தாலும்,ஒரு இனிப்பைக் கண்டவுடன் மனம் அதை நாடுகிறது, சுத்தமாக பசி இல்லையென்றாலும் மனம் அவரைச் சாப்பிட வைக்கிறது, ஆனால் பிறகு அந்த சுமையை மனம் தாங்கவில்லை, உடல் தாங்கிறது 😂. மொத்ததில் வேகமாக நகரும் இயல்புடைய மனதை உற்று நோக்கி வசப்படுத்துப்பவர்களுக்கு, வாழ்க்கை வசைப்படுகிறது.
இவ்வனைத்தையும் இயக்கும் எல்லையில்லா கருணைக் கொண்டப் பிரபஞ்ச சக்தியை வணங்கி இக்கட்டுரையை இங்ஙனம் நிறைவு செய்கிறோம்.
Comments
Post a Comment