கடந்த சில காலமாக நாம் அரசியல் சார்ந்த பதிவுகளை போடுவதில்லை, கிருஷ்ணாஜியின் தாக்கத்தால், ஏனெனில் அரசியல் ஒரு எல்லைக்கு மேல் மக்களை பிரித்து ஆளவே பயன்படுகிறது ஒவ்வொரு இயக்கத்தாலும் தங்களுக்கு ஏற்றாற் போல். வலது என்றால் இடது முளைக்கும், இடது என்றால் வலது முளைக்கும்.
மனிதர்கள் முழுமையாக ஒன்றினைய அனைத்து அடையாளங்களையும் துறந்தால் மட்டுமே சாத்தியம்.
இருப்பினும் 75வது சுதந்திர தினத்தின் நினைவாக பெரும் பகுதியினரிடம் இருந்து மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட ஒரு பிரதமருக்கான நன்றியுரையாக இப்பதிவினை தொடர்கிறோம்.
இவருக்கு முன்னால் இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஆட்சிகள், இவருக்கு பின்னால் நான்காண்டுகளில் நான்கு ஆட்சிகள், நடுவில் இவருடைய ஐந்தாண்டு ஆட்சி. இது அந்த காலகட்டத்தில் இருந்த நிலையற்ற அரசியல் தன்மையையும், அவரின் அரசியல் சாதுர்யத்தையும் காட்டுகின்றது.
இவர் பிரதமராக பதவி ஏற்ற போது இன்று ஏறக்குறைய இலங்கையில் இருக்கும் பொருளாதார சூழல் போன்றது, நாடு அன்று மிகவும் நெருக்கமாக இருந்த சோவியத் யூனியன் விழுந்த தருணம், வளைகுடா யுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம், கட்சியின் தலைவர் திடீர் மறைவு.
இந்திய தேசத்தை புதுமையாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம், இதை செய்தாரா அந்த பிரதமர்?!
செய்தார் என்பது 31 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது ஒரு தலைமுறைக்கு பிறகு தெளிவாக தெரிகின்றது. இருப்பினும் திட்டமிட்டு அவரை தவறான காரணங்களுக்காக மட்டுமே சிலர் நினைவு கூற வைக்கின்றனர், வியப்பமாக அவர் கட்சியை சார்ந்த சிலரே, இவர் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டாலே பல சதவிகிதம் வாக்குகள் உயரும்.
அந்த அபூர்வ முன்னாள் பிரதமர் தான் பி.வி.நரசிம்ம ராவ். அவர் முடிவெடுக்க தடுமாறுபவர் என்று சொல்லுவோரும் உண்டு, ஆனால் பொருளாதார சூழ்நிலை பற்றி விளக்கப்பட்ட போது, சில மணி நேரங்களில் யதார்த்தத்தை உணர்ந்து, 50 ஆண்டுகளாக அவர் சார்ந்து இருந்த பொருளாதார கொள்கைக்கு மாறுபட்ட பொருளாதார கொள்கை கொண்ட டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களை நிதி அமைச்சர் ஆக்கினார், அவருக்கு அரசியல் முதுகெலும்பாகவும் இருந்தார். அதிகபட்சமாக ஆண்டுக்கு 5 சதவீதம் வளர்ச்சி மட்டுமே கண்டிருந்த இந்திய தேசம், இவருடைய ஆட்சியின் இறுதி இரண்டு ஆண்டுகளில் 8 சதவீதம் தொடர்ந்து பெற்றது. ஒரே ஒரு தொலைக்காட்சி மட்டுமே இருந்த நிலை மாறி இன்று 700க்கும் தொலைக்காட்சிகளை நாம் இன்று காணுவதற்கு இவர் ஆட்சியில் ஏற்ப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களே காரணம்.
90's கிட்ஸ்க்கு முன்காலம் வரை பெரும் பணக்காரர்கள் என்றால் டாட்டா, பிர்லா மட்டுமே என்ற சொற்றொடர் மறைய தொடங்கியது அந்த பொருளாதார சீர்திருத்தங்களால். தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் கொள்கை போல் தோன்றினாலும், ஒரு பொதுத்துறை ஊழியருக்கு கூட பாதிப்பு ஏற்பட கூடாது என்று உறுதியாக இருந்தார். அடுத்த தேர்தல் வெற்றியைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் அடுத்த தலைமுறைக்காக சிந்தித்த பிரதமர்.
முதன்முறையாக முதலீடுகளை வரவேற்க வெளிநாடு பயணம் செய்த பிரதமர் இவரே, பல மேற்கத்திய நாடுகள் உடனான வெளியுறவு தொடர்புகளை புதுப்பிக்கப்பட்டது இவருடைய ஆட்சி காலத்தில்.
இறுதியாக ஒரு வியப்பான சம்பவத்தொடு இப்பதிவை நிறைவு செய்கிறோம், வாஷிங் மிஷின் இறக்குமதியின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பிற்போக்கான எதிர்ப்புகளை கடந்த பிரதமர்.
இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கின்றதா என்பது ஒரு கேள்விக்குறி, அதற்கு விதியும் காரணமோ என்றே எண்ண தூண்டுகிறது, அவருடைய ஜாதகத்தில் புகழுக்கு உடைய பாக்கியாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியும் மறைந்து இருந்தது தான் அவர் உரிய அளவுக்கு பிரபலம் அடையவில்லையோ என்ற எண்ண தூண்டுகிறது.
இன்று வேறுமாதிரியான பொருளாதார சீர்திருத்தங்கள் தேவைப்படலாம், ஆனால் 1991இல் அவர் தலைமையிலான ஆட்சியினால் கொண்டு வரப்பட்ட பல மாற்றங்களால் தான் இன்று இந்தியா வலிமையான தேசமாக 75வது சுதந்திர தினத்தை கொண்டாட முடிகிறது.
Comments
Post a Comment