Skip to main content

Posts

Showing posts from October, 2022

புத்தியும் புதனும்

 முந்தைய பதிவில் இரண்டு கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும் குணநலன்களை பார்த்தோம், இந்த பதிவில் புத்திகாரகனான புதனின் ஆதிக்கத்தில் உள்ள குணநலன்களை பார்ப்போம். புதன் என்றாலே புத்தி என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். கணிதம், ஜோதிடம், கணினி சார்ந்த துறைகள், கவிதை, எழுத்து, பேச்சு சாதுர்யம் இவை அனைத்துக்கும் புதனே முதன்மையாக ஆதிக்கம் செலுத்தபவர். புதனின் வயதாக குறிப்பிடப்படுவது 12 வயதுக்குள்ள குழந்தை பருவம். இதை நாம் இன்னொரு கண்ணொட்டத்தில் பார்க்கும் போது குழந்தைகளுக்கு தான் "Curiosity" அதிகம் இருக்கும், இது எப்படி வேலை செய்கிறது, அது எப்படி வேலை செய்கிறது என்று. "Curiosity" உள்ளவர்கள் ஆழமாக கற்க முடியும்.  என்ன நடக்க போகிறது என்பதற்கு மட்டும் ஜோதிடத்தை பயன்படுத்தாமல் ஏன் நடக்கிறது என்று உணரும் பல உண்மைகள் தெளிவாகப் புலப்படுகிறது!! நன்றி!!

விடாமுயற்சியும், வேகமும்

 இந்தப் பதிவை சனிக்கிழமை காலை சனி ஹோரையில் எழுதியதும் வியப்பு. ஏனெனில், ஒரு செயலை தொடங்கி நெடுநாட்கள், நெடுவருடங்கள் அதை தொடர்ந்து செய்வதற்கு, பிறந்த ஜாதகத்தில் சனிபகவானின் வலிவு முக்கியம். 'The art of perseverance' comes with the strength of Saturn. குறிப்பாக, அரசியலிலும், பல விதமான காரணங்களுக்காக போராடுபவர் ஜாதகத்தில் சனிபகவான் வலுத்திருக்க கூடும். தொடர்ந்து போராடும் மனோ திடத்தை கொடுக்க வல்லவர் சனிபகவான். இதே, துடுக்காக செயல்பட வைப்பவர் செவ்வாய் பகவான். ஆகையால். நான் கிரகங்களை வயது வாரியாக பார்க்கும் போது, செவ்வாய் பகவானுக்கு பதின்ப வயது முதல் உள்ள இளமை காலத்தையும், சனிபகவானுக்கு முதுமை காலத்தையும் வயதுகளாக அடையாள படுத்திருக்கின்றனர். இளங்கன்று பயமறியாது என்பது போல் செவ்வாய் வலுத்தவர்கள் துடிப்பாக இருப்பார்கள். 100 மீட்டர் பந்தயத்தில் ஓடி வெல்ல வைப்பவர் செவ்வாய், மராத்தான் பந்தயத்தில் ஓடி வெல்லப் வைப்பவர் சனிபகவான். இதில் மற்ற கிரகங்களையும், ஸ்தானங்கைளயும் பொறுத்து இந்த வேகமும், விடாமுயற்சியும் நல்லது அல்லாததுக்கும் பயன்படலாம், நல்லதுக்கும் பயன்படலாம். நன்றி!!