எழுத்துச்சித்தர் பாலகுமாரன் ஐயாவின் சில வார்தைகளை கடன் வாங்கி இங்கே எழுதிகிறோம். "பேசும் போது நம் எண்ணங்கள் சிதறும், ஆகையால் மனம் கூச்சல் இடுகின்றது, அதுவே எழுதும் போது எண்ணங்கள் ஓரளவுக்கு மேல் குவிகின்றது" மெளனத்திலே எண்ணங்கள் உதயமாவது அற்றுபோகின்றது. ஒரு நாள் நம்மால் மெளனவிரதம் இருக்கமுடியுமா?! மெளனத்தை மனம் முயற்சிக்கும் போது தான், அது அளவில்லாமல் அலைபாய்கின்றது. சோடா பாட்டிலை நாம் திறக்கும் போது எவ்வாறு காற்று பீறிட்டு வருகின்றதோ, அது போல் நாம் மெளனமாக இருக்க முயற்சிக்கும் போது மனம் அதிகம் உத்வேகம் அடைகின்றது. சும்மாவா சொன்னார் அருணகிரிநாதர், 'சும்மாஇரு சொல்அற என்றலுமே, அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே' என்று. இந்த ஆழ்அமைதியே உண்மையான மெளனம், இது கிட்டுவதற்கு இறைவனின் கருணை இருப்பின் மனதை உற்று நோக்கியா அல்லது மனம் அவன் அருளால் தானாக அடங்கி ஒடுங்கிவிடுவதை அன்றி வேறேதும் வழி இருப்பதாக தொன்றவில்லை. "வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து" ~விநாயகர் அகவல் "விலங்கு மனத்தால் விமலா உனக்கு கசிந்து உள்உருகி நலந்தான் இலாத சிறியேற்கு