கவியரசு கண்ணதாசன் இவர் பெயரைக் கேட்டாலே ஒரு ஆறுதலும் ஆனந்தமும் பற்றிக்கொள்கிறது. தமிழ் உள்ளவரையில் இவர் பெயரும் எழுத்தும் நிலைத்து இருக்கும். அளவில்லா பொக்கிஷங்களை பாமரர்களுக்கும் புரியும் வகையில் அள்ளி வீசி விட்டு சென்று இருக்கிறார். ஒரு வகையில் அவர் இலக்கிய உலகத்தில் மட்டும் கோளோச்சியிருந்தால் தமிழ் அறிஞர்களுக்கு மட்டும் பாத்திரமாக இருந்திருப்பார், ஆனால் இறைவனின் விருப்பம் அவரை திரையுலகிற்கு கொண்டு வந்துவிட்டது. தமிழ் பேசப்படும் வரை கவிஞரின் வைர வரிகள் நிலைத்து இருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும்.
அதேபோல் தான் அரசியிலும் அவர் பயணம் முழுமை பெறாமலே போனது, இல்லையென்றால் அங்கும் ஒரு குறிப்பிட்ட வட்டதிற்குள் அவர் இருந்து இருப்பார். இதை அவர் விரவாக அவர் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். சுவாரியமாக, 1957இல் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்றைய இராம்நாட் மாவட்டம், இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் நிறுத்தப்பட்டார், ஆனால் காங்கிரசின் வலிமையான பகுதியாக அது இருந்ததால் அங்கு அவருக்கு மூன்றாம் இடமே கிடைத்தது. அதே சமயம், அப்போது சென்னையில் அவர் இல்லம் அமைந்திருந்த இராயப்பேட்டை பகுதியை உள்ளடக்கிய ஆயிரம் விளக்கு தொகுதியில் அக்கட்சியின் சார்பில் நிற்க வைக்கப்பட்ட வேட்பாளர் கட்சியின் கட்டமைப்பு காரணமாக பெரிய செலவு இன்றி எளிமையாக வெற்றிப் பெற்றார். விதியின் விளையாட்டு இதைத் தீர்மானித்தது. அதே போல் பின் ஒரு சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட நாடாளுமன்ற சீட்டை அவர் நண்பர் குமாரமங்கலம் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தார். அவரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றார்.
மனித வாழ்கையில் ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்திற்கும் பாட்டு எழுதி வைத்து இருக்கிறார்.
"காலமிது காலமிது கண் உறங்கு மகளே, காலமிதை தவறவிட்டால் தூக்கமில்லை மகளே", போன்ற தாலாட்டு பாடல்களும், " சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை", போன்ற காதலை ஒரு வரியில் சொல்லும் காதல் பாடல்களும், "ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை, அடுத்த அடுத்த நடப்பும் உன் கையில் இல்லை, பாதை வகுத்த பின்பு பயந்த என்ன லாபம், பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்", போன்ற நடுவயதுகளில் உள்ளவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கை அளிக்கும் தத்துவ பாடல்களும், அந்தம் பற்றி கூறும் "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ" போன்ற பாடல்களும், இறைவனின் கருணையால் அவர் இயற்றிக்கிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், வீடு வரை உறவு பாடல் பட்டிணத்து அடிகள் இயற்றிய,
"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி யம்பொழுக
Comments
Post a Comment