மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையிலே வாராமற் கா’
பொருளுரை:
அன்னை என்னைப் பெற்று பெற்று உடல் சலித்தாள் !
இந்த பாபியும் பிறந்து பிறந்து, தேவையில்லாதது பின் ஓடி கால் சலித்துவிட்டான் !
இவனைப் படைத்த பிரம்மனும் இவன் தலையெழுத்தை எழுதி எழுதி கை சலித்துவிட்டான் !
நாதா இருப்பையூரில் வாழும் சிவனே, இந்த பாபி இன்னும் ஒரு அன்னையின் கருப்பையில் பிறவாமல் இருக்கக் காப்பாற்று !
Comments
Post a Comment