மட்டைப்பந்து ஆட்டத்தை உற்று நோக்குபவர்களுக்கு இந்த நாள் (24/09/2007) நன்றாக நினைவிருக்கும். இந்த நாளில் தான் முதலாவது 20 ஓவர் உலகப் கோப்பையையின் இறுதி ஆட்டம் நடைப்பெற்றது. அன்றைய தினம் மகேந்திர சிங் தோனி இந்தியாவிற்காக தனது முதல் கோப்பையைப் பெற்றார். இது ஒரு சரித்திர பதிவு, அதன் பிறகு இந்திய மட்டைப்பந்து அணி 20 ஓவர் உலகப் கோப்பையைக் கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிட்டதக்கது.
சரி இதில் நமக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது ? இங்கே குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அதே 5 மாதங்களுக்கு முன்பு நடைப்பெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் சுற்றுலேயே வெளியேறியிருந்ததாலும், 20 ஓவர் ஆட்டத்தில் ஆசிய அணிகளுக்கு பெரிய அளவில் பரிச்சியம் இல்லாத காரணத்தாலும், இந்திய அணியின் மீது பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு இல்லை. சில சமயங்களில் அதீத எதிர்ப்பார்ப்பு ஒருவரை சற்று இயல்புகளிலிருந்து மாற வைக்கக்கூடும், ஒரு விதத்தில் எதிர்ப்பார்ப்புகள் பொறுப்பாக தோன்றினாலும், சற்று தேவையில்லாத அழுத்தத்தை சார்ந்தவர்களுக்கு கொடுக்கலாம். ஏதோ நாம் தான் இந்த செயலுக்கு முழு பொறுப்பு என்று சில சமயங்களில் நாம் பணியிடத்தில் கருதிக்கொள்கிறோம், உண்மையில் நாம் மனதைத் தளர்வாக வைத்துக்கொண்டு நம்மிலிருந்து சற்று விலகி பார்க்கும் போது நாம் செய்ய வேண்டிய செயல் துல்லியமாக தெரியும். சிலர் இதை உணர்ந்திருக்கலாம், நாம் பிறருக்கு தீர்வு கூறும் போது, நமக்கு எளிதாக பல யோசனைகள் தோன்றி, எளிமையான தீர்வை நாம் கூறியிருப்போம். அதே நேரத்தில் நமக்கு என்று வரும் போது, நம்மை நடுவாக கருதுவதால் சற்று சிரம்ப்பட்டே கண்டுபிடித்து இருப்போம்.
மீண்டும் நாம் இந்திய அணியின் உலகப் கோப்பை பயணத்திற்கு செல்வோம். முதலாவது சூப்பர் 8 குழு ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இந்திய அணி இழந்த்து, இதன் பிறகு நடைப்பெற்ற இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையிருந்ததது. அதை மெய்பிக்கும் வகையில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு பயணித்தது. இதில் குறிப்பிட்டு சொல் வேண்டும் என்று சொன்னால், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ் சிங் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் விளாசிய நிகழ்வும் அரங்கேறியது. தென் ஆப்பிரிக்காவிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக அவர் பங்கேற்க முடியாவிட்டாலும், இந்திய அணி 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற அபார வெற்றி காரணமாக, ஒரு கட்டத்தில் அரையிறுதி இடத்தை ஏறக்குறைய உறுதி செய்து இருந்த தென் ஆபிரிக்கா அணி தொடரிலிருந்து வெளியேறயது. பிறகு நடைப்பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதியில் அணிக்கு திரும்பிய யுவராஜின் விளாசல்கள் தொடர இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு பயணித்தது. இறுதி ஆட்டத்தை அனைவரும் நினைவில் வைத்து இருக்கக்கூடும். அணியாக ஜொலித்து இந்திய அணி மணியாக கோப்பையைக் கைப்பற்றியது.
வழியறியாத மனிதனுக்கு எதிர் வரும் சவால்களே சந்தர்ப்பங்களாக அமைகின்றது.
Comments
Post a Comment