- வாழ்க்கை ஒரு சுமையல்ல சுமப்பதற்கு , இது ஒரு வரம் வாழ்வதற்கு
- மாவு ஒன்று தான் பணியாரம் பல
- பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
- தமிழ் இலக்கியம் படித்தவன் தளர்வுறுவதில்லை
- மின்சாரம் பாய்கின்றது என்பதைத் தொட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை, ஒளிரும் மின் விளக்கிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்
- அன்பின் மிகுதியால் செய்யும் செயல்கள் யாவும் சுமையாக தெரிவதில்லை சுகமாகவே தெரிக்கின்றது
- மனதில் சலனம் என்பது கார்மேகங்கள் சூழ்ந்து மழைவர தயாராக உள்ள தருணம், அது செயலாக மாறினால் மழை பொழிந்துவிடுவது போல. மனதோடு நின்றுவிட்டால் காற்றடித்து மேகங்கள் கலைந்து விடுவது போல
- முடிவு என்னவாக இருக்கும் என்பதை யோசிக்காமல் எந்தக் காரியத்தையும் தொடங்காதே
- ஆரவாரம் சொல்லித்தராத பல விஷயங்களை அமைதி சொல்லித் தருகின்றது
- அந்த நாளை என்பது எந்த நாளை என்பது தான் புரியவில்லை
- கோபமும், குரோதமும் உங்களையே அவமானப் படுத்துகிறது
- நாம் ஒரு துடைப்பக்கட்டை என்பதைப் புரிந்துகொண்டால் தெளிவு வந்து விடும்
- மாறுவது மனம் ! ஆறுவது சினம் ! அறியாத சிறுவனா நீ ?!
- ஒரே விஷயத்தை பலக்கண்கள் பார்த்தாலும் விஷயம் ஒன்று தான்
- வானம் எப்போதும் மேகம் இல்லாமல் இருப்பதில்லை, மனமும் சிந்தனையில்லாமல் இருப்பதில்லை
- மாவு அரைப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு அரிசியும் தனிப்பருக்கையாக இருந்தாலும் அரைப்பட்ட பின் அனைத்தும் ஒன்றே
- ஆன்மா இவ்வுடலோடு சம்மந்தப் பட்டிருப்பது, ஒரு பயணி பயணித்திற்காக ஒரு தொடர்வண்டி உடன் அல்லது வேறு ஏதோ ஒரு பயண மார்க்கத்தோடு தொடர்பு கொள்ளுதல் போல, ஒரு பயண மார்க்கம் முடிந்தவுடன் வேறு பயண மார்க்கம். பயணம் முடிவு பெறும் போது, பயண மார்க்கமும் முடிவு பெறுகிறது !
- இறப்பைப் பற்றி அறிந்து கொண்டால் தான் இருப்பை ஒழுங்காகப் பயன்படுத்த முடியும்
- உருகாத நெய், எடுக்கும் கரண்டியை விட்டு வர சிரம்ப்படுகிறது, அதேபோல் உருகாத உள்ளமும், ஞானத்தை அடைய சிரமப்படுகின்றது
- கவியரசர் ஒரு ஞான பொக்கிஷம்
- மனம் எனும் மேகம் விலகும் பொழுது, ஞானம் எனும் வானம் தெளிவடைகின்றது
- காலம் மிளிர்கின்றது, கனவு பலிக்கின்றது
- பூரி மாவு திரட்டும் போது கூட திரட்டியில் ஒட்டாமல் இருந்தால் தான் சரியாக வருகிறது, மனித மனமும் பற்றின்றி இருக்கும் போது, இலகுவாக இருக்கின்றது
- இறைவனின் மொழி கருணை
- நம் கொண்டாட்டம் பிறருக்குத் திண்டாட்டமாக இருந்துவிடக் கூடாது
- இறைவனின் பிட்சை அமைதி
- தேடிப் பெறுவது இன்பம் இல்லை, தேடலில் நிலைப்பது
- சுதந்திரம் என்பது சுவாசக் காற்று போன்றது, மிகையானல் அடக்கமின்மை, குறையானால் அடிமைத்தனம்
- உன் பிறப்பு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இந்த உலகில் உன் இருப்பு ஓர் சரித்திரமாக இருக்க வேண்டும்
- செயலைத் துறப்பது துறவு அன்று ! செயலின் விளைவின் துறப்பதுவே துறவு !
Comments
Post a Comment