1.
பிரபஞ்சத்தின்
இயக்கத்தை அறிவது விஞ்ஞானம் ! பிரபஞ்சத்தின் இயக்க சக்தியை அறிவது மெய்ஞானம்
2.
பிழைப்பிற்காக
கற்பது மட்டும் கல்வியன்று பலரை பிழைக்க வைப்பதற்காவே கல்வி
3.
உழைப்பு என்பது
நீ உழைக்கிறாய் என்ற உணர்வை கொடுக்காத உழைப்பாக இருக்க வேண்டும்
4.
உன்னை உனக்கு
அடையாளம் காட்டுபவரே குரு
5.
மற்றவர்க்குப்
பிடித்தது போல் வாழ்வதற்கு மற்றவர்கள் இருக்கிறார்கள் ! நமக்கு பிடித்தது போல் வாழ்வதற்கு நாம் மட்டும்
தான் உள்ளோம் !
6.
சத்தமாக வருகிறான்,
சத்தமில்லாமல் பிரிகிறான்
7.
மனிதன் அமைதியில்
தொடங்கி, நிறைவேறாத ஆரவாரத்தில்
திளைத்து, மீண்டும்
அமைதியைத் தேடி அலைகிறான்
8.
உலக தாய்மொழி
தினமான இன்று, ஒவ்வொருவரும்
தங்கள் தாய்மொழி இலக்கியங்களில் ஒன்றையாவது தங்கள் வாழ்நாளில் படிக்க உறுதி பூண
வேண்டும். இலக்கியங்கள் தான் ஒரு மொழியை
உயிர்ப்புடன் வைத்து, அடுத்த
தலைமுறைக்கு வாழ்வியலையும் மொழியுடன் கொண்டு செல்ல உதவுகின்றன.
9.
மனிதன் மாடு,
நாய் போன்ற பிற விலங்குகளிடம் பேதம்
காண்பதில்லை ! தனக்குள் பேதம்
பார்த்துக்கொள்கிறான்! மாடுகளும், நாய்களும் மனிதனிடம் பேதம் பார்ப்பதில்லை! ஆனால் தங்களுக்குள் பேதம் பார்த்துக்
கொள்கின்றன! இயற்கையின் விளையாட்டு !
10.
முட்டையில்
இருந்து கோழி வந்ததா, அல்லது
கோழியிலிருந்து முட்டை வந்ததா என்று தொடங்கி இவ்வுலகில் எல்லா காரண காரியங்களும்
பிணைக்கப்பட்டுள்ளன
11.
ஆரவாரமில்லாத
மனமே, ஆற்றலின் உறைவிடம்
12.
வேண்டாம்
என்றாலும் விடாது, வேண்டும்
என்றாலும் வராது
13.
தலை வலி கூட
தனக்கு வந்தால் தான் தெரியும், எத்தனை உண்மையான
ஒன்று
14.
பலவீனமானவர்களிடம்
வீரத்தைக் காட்டுபவரை விட கோழை எவரும் இல்லை
15.
வானம் பொழிகிறது,
பூமி விளைகிறது... இது வீர வரிகள் அல்ல ஞான வரிகள்
16.
மனிதன் பிறரைப்
பற்றி அறிவதை விட்டுவிட்டு தன்னைப் பற்றி அறியம் போது அமைதி ஏற்படுகின்றது
17.
செய்யும் தொழிலை
அன்னையாக மதித்தால் அதில் அரியணை ஏறலாம்
18.
கண்ணால்
காண்பதும் பொய் ! காதால் கேட்பதும் பொய் ! தீர விசாரிப்பதே மெய் !
19.
வழி அறியாத
மனிதனுக்கு எதிர்வரும் சவால்களே, சந்தர்ப்பமாக அமைகிறது
20.
வாழ்க்கை என்பது
நெடுந்தூர ஓட்டப்போட்டி போலே, இங்கே வேகமாக
ஓடுகிறவர்கள் வெற்றிப் பெறுவதில்லை, நிற்காமல் ஓடுபவர்களே வெற்றி பெறுகிறார்கள் !!
21.
நிலையற்றதில்
மனம் நிலைப்பெற முயலும் போது, மனம் சஞ்சலம்
கொள்கிறது !
உண்மையில் மனதை
எந்த பொருளாலும் நிலைப்பெற செய்யமுடியாது, சத்தியம் என்னும் இறையருளால் இறையருளில் அன்றி !!
22.
உங்கள் எண்ணங்களை
நியாயப்படுத்தாதீர்கள், அவை ஆற்று நீர்
ஓட்டத்தைப் போல விடும் போது தான் கடலில் கலந்து அமைதி பெறுகிறது !!
23.
பெருமைக்காக நாம்
சில செயல்கள் செய்யும் போது, அது
சிறுமையாகவும் முடியலாம்
24.
பயன் இல்லாததை
சொல்வதில்லை என்று நாம் முடிவெடுத்தால் பல பிரச்சினைகள் தாமாகவே தீர்ந்து
விடுகின்றன
25.
பிரச்சனையாகப்
பார்த்தால் பிரச்சினையாகத் தெரியும். வாய்ப்பாகப் பார்த்தால் வாய்ப்பாகத் தெரியும்
26.
கஷ்டப்பட்டு
செய்கின்ற எதுவும் கசக்கிறது ! இஷ்டப்பட்டு செய்கின்ற எதுவும் இனிக்கின்றது !
மனதால் செய்யும் செயல்களுக்கே நாம் விலைப்பேச முடியும், இதயத்தால் செய்யப்படும் செயல்கள் விலை மதிப்பில்லாதது !
27.
தேகம் பெருக்க
இதயம் சிறுத்தது
28.
நாளை
இருண்டுவிடும் என்று மற்றவர்கள் நினைக்கும் போது, நிச்சயம் இருள் அகன்று ஒளி பிறக்கும் என்று நம்புவனே
வெற்றிப்பெகிறான்
Comments
Post a Comment