சமீப காலமாக நாம் எந்த தலைப்பை பற்றியும் பெரிதாக எழுதவில்லை. காதலர் தினம் நெருங்கி வருவதால் காதல் பற்றி எழுதலாம் என்ற நினைப்பு. தனிப்பட்ட முறையில் தினங்களை அனுசரிப்பது நம் வழக்கம் இல்லாவிட்டாலும் தலைப்பிற்கு அது பயன்படுகிறது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ரசித்து வாழ வேண்டியது, வருடத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் நாம் அனுசரிப்பது என்பது, பத்து நாட்கள் ஏதும் சாப்பிடாமல், ஒரே நாளில் நாற்பது இட்லி சாப்பிட முயற்சிப்பது போல. நாட்களை வணிக மயமாக்கவே இது போன்ற யுத்திகள் பயன்படுத்த படுவதாக நம் எண்ணம். சரி தலைப்பிற்குள் நுழைவோம். நம் முகநூல் பக்கத்தில் அதிகம் எழுதபடாத ஒரு தலைப்பு. காதல் என்பது இளைஞர்களின் விருப்பமான வார்த்தையாக உள்ளது. காதல் என்ற உடனே சினிமா காட்சிகளும், பாடல்களும் பிரதானமாக நினைவிற்கு வரும் அளவிற்கு அவை ஊடுருவி இருக்கின்றன. காதல் எனும் உணர்ச்சி உயிர் இனங்கள் தோன்றிய முதலே உள்ள உணர்ச்சி, ஆனால் திரையில் நாம் காதலை காணுவது என்பது அதிகபட்சம் 100 ஆண்டுகளுக்கு உள்ளாக தான் இருக்க முடியும். இதை நாம் அழுத்தமாக குறிப்பிட வேண்டியதற்கான காரணம், காதல் எனும் உணர்ச்சியை நாம் முழுமையாக உணர தொடங்