நாம் ஏதோ ஒன்றை இறுகுப்பற்று கொண்டே இருகக வேண்டும் என்று நினைக்கிறோம், அந்த ஒன்று ஒவ்வொரு சூழ்நிலைகளும், வயதுகளிலும் மாறுபடுகிறது. ஒரு சிறிய குழந்தை பொம்மைகளை பிடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது. ஒரு வாலிபன் பருவ இன்பங்களை பிடித்துக் கொள்கிறான். இந்த இன்பங்கள் என்றும் தொடர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இவை கிடைக்குமா, கிடைக்காத என்ற எண்ணமே அஞ்சலத்தின் அடிசுவடு. மனம் சஞ்சலம் கொள்வதற்கு முக்கிய காரணி அடுத்தென்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து எண்ணுவது தான். ஒரு செயலை செய்து கொண்டே இருக்கும் போதே, அடுத்த நடக்கவிருக்கும் செயலை அல்லது செயல் திட்டத்தை யோசிப்பதே மன சஞ்சலத்தின் ஆரம்பம. பல நடக்காத கற்பனைகளைளும் மனம் படம் போட்டு கொண்டிருக்கிறது, அதுவே சஞ்சலத்திற்கு காரணம். மனம் என்பது நிலையற்றது. ஓடும் நீரோடை போன்றது. மனம் எது? மூளை எது? சிந்தனை கடல் எங்கிருந்து உருவாகன்றது என்று அறிந்து சிந்தனையின் ஆதாரத்திற்கு செல்வதே மனதை அமைப்படுத்தும் ஒரே மருந்து. இதற்கு பல வழிமுறைகள் கூறப்ட்டுள்ளன, பக்தியுடன் ஒன்றுவது, கர்மத்துடன் ஒன்றுவது, ஞானத்தோடு ஒன்றுவது, தியானத்தோடு ஒன்ற...